தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

144 தடை மீறல் - 77 நபர்களை கைது செய்த காவல் துறை! - corona virus

டெல்லி: 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 77 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

sdsd
dsd

By

Published : Mar 24, 2020, 11:32 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு டெல்லி முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவைமுதலைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்திருந்தார். இதனால், டெல்லி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி வெளியே வருவோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வந்தனர்.

அந்த வகையில், நேற்று 144 தடையை மீறிய குற்றத்திற்காக 77 நபர்களை காவல் துறையினர்கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், "144 தடை உத்தரவை மீறிய 674 நபர்களை தடுத்து நிறுத்தினோம். அதுமட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடையை மீறி சாலையில் சென்ற 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:‘அடுத்த 21 நாள்களுக்கு நாடு முடக்கம்’ - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details