ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கலால் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நர்சிபட்டினத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
767 கிலோ போதை வஸ்துகள் பறிமுதல்! - 767 kg of narcotics seized in vishakappattinam
ஹைதராபாத்: 767 கிலோ போதை வஸ்துகளை கலால் துறை அலுவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
லாரி
அப்போது, லாரி ஒன்றில் சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 767 கிலோ போதை வஸ்துகள் பிடிபட்டது. அதனை பறிமுதல் செய்த கலால் துறை அலுவலர்கள், லாரி ஓட்டுநரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் நடக்கும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு பின்னணியில் பெரும் கும்பல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.