தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுமி பாலியல் வன்புணர்வு - 75 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை! - உபி பாலியல் வன்புணர்வு வழக்குகள்

லக்னோ: மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த 75 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

attempting-to-rape-3-year-old-girl
attempting-to-rape-3-year-old-girl

By

Published : Oct 19, 2020, 7:29 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 75 வயது முதியவர் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக, சிறுமியின் தந்தை காவல்துறையிடம் அளித்த புகாரின்பேரில் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் விரைவு நீதிமன்றம், முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அபராதத்தொகையில் பாதியை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க:”பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தால் இனி ஷாக் ட்ரீட்மெண்ட் தான்!” - உ.பி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details