தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 12:11 PM IST

ETV Bharat / bharat

சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 75 லட்ச குடிபெயர்ந்த தொழிலாளர்கள் - மத்திய அரசு

டெல்லி: சிறப்பு ரயில்கள் மூலம் 35 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பேருந்துகள் மூலம் 40 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Punya Salila Srivastava
Punya Salila Srivastava

இந்தியாவில் வெளிமாநிலங்களில் சிக்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கிவருகிறது. அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 75 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக உள்துறை இணைச் செயலர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வகையில் மே 1ஆம் தேதி முதல் 2,600 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் நான்கு கோடி மக்கள் குடிபெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மார்ச் 27ஆம் தேதி, அனைத்து மாநிலங்களுக்கும் தொழிலாளர்கள் பிரச்னையை நிதானத்துடன் கையாள வேண்டும் என்றும் அவர்களுக்குத் தேவையான உணவையும் இருப்பிடத்தையும் மாநில அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மார்ச் 28ஆம் தேதி குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு இருப்பிடம் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்தித் தர தேசிய பேரிடர் நிவாரண நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 3ஆம் தேதி ரூ.11,092 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியது.

இதுதவிர குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான பிரச்னையை கையாள சிறப்புக் கட்டுப்பாடு அறை ஏற்படுத்தப்பட்டது. அரசு ஏற்படுத்தியிருக்கும் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மறுபுறம் லாரி, டிராக்டர் மூலம் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல மத்திய அரசு தடை விதித்தது.

மே 1ஆம் தேதி முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி தரப்பட்டது. அதன்படி ரயில்வே துறை இயக்கிய சிறப்பு ரயில்கள் மூலம் 35 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் பேருந்துகளைப் பயன்படுத்திய 40 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:ஒரு லட்சம் கோடி வேண்டும் - மத்திய அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details