தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுயசார்புக்கு குரல் கொடுத்த மோடி!

டெல்லி: சுயசார்பு கொள்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 15, 2020, 10:53 AM IST

மோடி
மோடி

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ண கொடியை 7ஆவது முறையாக ஏற்றிவைத்து உரையாற்றி பிரதமர் மோடி, சுயசார்பு கொள்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "130 கோடி இந்தியர்களின் தாரக மந்திரமாக சுயசார்பு கொள்கை மாறியுள்ளது. உள்ளூர் பொருள்களை வாங்க உறுதி ஏற்க வேண்டும்.

மோடி

இந்தியர்களின் உள்ளத்தில் சுயசார்பு இந்தியா இடம்பிடித்துள்ளது. அந்தக் கனவை நனவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை கட்டமைக்க 130 கோடி இந்தியர்கள் உறுதி ஏற்றுள்ளனர். இந்தியர்களின் திறனில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த இலக்கை அடையும் வரை ஓய மாட்டோம்.

மோடி

75ஆவது சுதந்திர தின விழாவை நோக்கி செல்லும் இந்த தருணத்தில் சுயசார்பு கொள்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன். இந்தியாவை இன்று உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகம் வளர இந்தியாவும் வளர வேண்டும். நம் நாட்டில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் சிந்தனையாளர்களாக உள்ளனர்.

இன்னும் எத்தனை காலத்திற்கு இறக்குமதியை நம்பி இருப்போம். அதற்கு முடிவு கட்ட காலம் வந்துவிட்டது. அனைத்து விதமான பொருள்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி உலக நாடுகளுக்கு ஏற்றமதி செய்ய வேண்டும்.

மோடி

அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா சாதனை படைத்துள்ளது. அதில், 18 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளோம். கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் இந்தியாவில் முதலீடு அதிகரித்துள்ளது. சுயசார்பு திட்டத்தின்கீழ் வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தலைவர்கள் உருவாக்கிய சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம் - ராம்நாத் கோவிந்த்

ABOUT THE AUTHOR

...view details