நாடே குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.பி. சிங், நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் 70 ஆண்டுகள் பழமையான இந்திய அரசியலமைப்பு குறித்தும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் விவரிக்கிறார்.
இந்திய அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எஸ்.பி. சிங்:
மாற்றங்களுக்கும் அதனால் ஏற்படும் வளர்ச்சிகளும் ஒரு விலை கொடுக்க வேண்டும் என்கிறார் சிங்.
மேலும் "அரசியலமைப்பை ஏற்றபின் இந்தியாவுக்கு பல்வேறு பணிகள் இருந்தன. முதலில் வறுமையை ஒழிப்பது, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது, அறிவியல் தொழில்நுட்பத்தை முன்னெடுப்பது. இதுமட்டுமின்றி நீதித்துறை, நிதித்துறை, வேளாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டிய நிர்பந்தமும் இந்தியாவுக்கு இருந்தது" என்றார், எஸ்.பி. சிங்.
அதேபோல்,"இப்போது நமது பாதுகாப்பு துறையைப் பார்த்தால், அது போதுமான அளவு வளர்ச்சியடைந்துள்ளது தெரியும். நம் நாட்டின் பாதுகாப்புத்துறை பல வளர்ந்த நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வலிமையுடன் உள்ளது. அந்நாடுகளுக்கு ஈடாக இல்லாவிட்டாலும் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
இதுமட்டுமின்றி வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், இந்தியாவை தன்நிறைவு அடையச் செய்துள்ளது. மேலும், தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்திய தொழில்துறையும் பெரும் வளர்ச்சியை அடைந்தது. 1950ஆம் ஆண்டுக்குப் பின் சமூகத்தில் முன்னேற்றங்கள் ஏற்படத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக" எஸ்.பி. சிங் கூறினார்.
சட்டப்பிரிவு 370 குறித்தும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் எஸ்.பி. சிங்: