அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கன மழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதன் ஒரு பகுதியாக காசிரங்கா தேசிய பூங்காவின் 70 விழுக்காடு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. உலகிலேயே அதிக அளவிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வாழும் இருப்பிடமாக இப்பூங்கா திகழ்கிறது. இந்நிலையில் இந்த மிருகங்கள் நீரில் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கப் பூங்காவிலிருந்து பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 360 விலங்குகள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா பூங்கா... தவிக்கும் விலங்குகள்!
அசாம்: காசிரங்கா தேசிய பூங்காவில் 70 விழுக்காடு பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் அங்குள்ள விலங்குகளை பாதுகாப்பான இடத்திற்கு பூங்கா ஊழியர்கள் இடம் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இது போன்ற வெள்ளத்தின் போது பூங்காவிலிருந்து வெளியேறி சில விலங்குகள் சாலையைக் கடக்கின்றன. அதனால் ஜாகலபந்தாவிலிருந்து நுமலிகர் வரை பூங்கா பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கு 40 கிமீ வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விலங்குகளை வேட்டையாடாமல் பாதுகாக்க வன காவலர்கள் இரவிலும் விழிப்புடன் இருக்கிறார்கள். இப்பூங்காவின் மொத்த பரப்பளவு 1,030 சதுர கி.மீ. ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளத்தினால் அதன் நிலப்பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது.
2017 ஆம் ஆண்டில், காசிரங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 31 ஒரு கொம்பு காண்டாமிருகங்கள் உட்பட 360க்கும் மேற்பட்ட விலங்குகள் நீரில் மூழ்கின. அசாமில் மழைக்காலம் என்பதால் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.