நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், மீண்டும் அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க நாட்டிலுள்ள 70 விழுக்காட்டினர் விரும்புவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை நீக்கியதால் பிரதமர் மோடியை இரும்பு மனிதர் என்று அழைக்கிறேன். நாட்டில் 70 விழுக்காட்டினர் இந்தியாவின் பிரதமராக மீண்டும்மோடியே வர வேண்டும் என விரும்புகின்றனர்.
நரேந்திர மோடி தொலைநோக்குச் சிந்தனைகொண்ட தலைவர். அனைத்து மாநிலங்களுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி மீது அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். முத்தலாக் ஒழிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒரு நாடு ஒரு ரேசன் திட்டம் என முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.