அடல் பிஹாரி வாஜ்பாயின் 95ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது பெயரில் மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, இந்த நேரம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தால் 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 11 லட்சம் பேர்.
சுகாதாரத் துறையை விரிவு படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம் என்றார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பலனடைந்தோர் 70 லட்சம் - பிரதமர் - அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவக் கல்லூரி
லக்னோ: ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தால் 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
70 lakh people have benefited from Ayushman Bharat: PM Modi