தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்கவுண்டரில் ஏழு நக்சல் பலி! - AK 47

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் படையினரால் ஏழு நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுவீழ்த்தினர்.

ரீசர்வ் படை

By

Published : Aug 3, 2019, 12:00 PM IST

வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் நக்சல்கள், மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய பாஜக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக இன்று காலை 6 மணியளவில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகான் பகுதியை அடுத்துள்ள சிதகோட்டா என்ற வனப்பகுதியில் ரிசர்வ் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்குப் பதுங்கியிருந்த ஏழு நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுவீழ்த்தினர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details