ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் பகுதியைச் சேர்ந்த ரத்தன் லால் என்பவர் டெல்லியில் தலைமைக் காவலராக பணியாற்றிவந்தார். அவர், கடந்த 24-ஆம் தேதி டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடித்த வன்முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்தனர். முன்னதாக இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.