தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'68% பயணிகள் விமானப் பயணத்தையே பாதுகாப்பாக கருதுகின்றனர்' - ஆய்வில் தகவல் - இண்டிகோ ஏர்லைன்ஸ்

இண்டிகோ விமான நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், 68 விழுக்காடு பேர் விமானப் பயணம் தான் பாதுகாப்பான போக்குவரத்து முறை என்று கருதுவதாகத் தெரிவித்துள்ளனர். 54 விழுக்காட்டினர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்தாலும், 17.6 விழுக்காட்டினர் கரோனா காலம் மாறும் வரை காத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

indigo airlines
indigo airlines

By

Published : Jul 16, 2020, 6:55 PM IST

டெல்லி: உலகளவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற கோவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில், விமானப் பயணம் பாதுகாப்பான போக்குவரத்து முறை என்று தாங்கள் கருதுவதாக, குறைந்த விலையில் விமான சேவையளிக்கும் நிறுவனமான இண்டிகோ நடத்திய ஆய்வில் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனை 68% பயணிகள் அந்த ஆய்வில் பதிவு செய்துள்ளனர்.

கரோனா காலத்தில் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு விமானப் பயணமே பாதுகாப்பானது என்று பெருவாரியான பயணிகள் கூறுகின்றனர். அதில், 8 விழுக்காட்டினர் மட்டும் தான் தொடர்வண்டி போக்குவரத்தை ஆதரிக்கின்றனர்.

முறையே 24 விழுக்காட்டினர் சுயமாக தங்கள் வாகனங்களில் பயணப்படுவதைப் பாதுகாப்பாக நினைப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பணமழையைப் பொழியும் ஜியோ பங்குகள்... 13ஆவது நிறுவனமாக வந்த கூகுள்!

54 விழுக்காட்டினர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்தாலும், 17.6 விழுக்காட்டினர் கரோனா காலம் மாறும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

2020 ஜூன் மாதம், 25 ஆயிரம் பயணிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலையைக் கண்டறியும் பரிசோதனை 86 விழுக்காடு பயணிகளை திருப்திபடுத்தியிருப்பதாக ஆய்வில் பயணிகள் கூறியிருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details