இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவரமாகிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 66 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 766ஆக அதிகரித்துள்ளது.