காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுவந்தது. இது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தான் 646 முறை எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஜனவரி 1ஆம் தேதிமுதல் பிப்ரவரி 23 ஆம் தேதிவரை 646 முறை தாக்குதல் சம்பவங்கள் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நடைபெற்றது. 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய பாதுகாப்புப் படையினர் 27 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். 45 பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.