தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாழ்வாதாரத்திற்காக சைக்கிளில் சென்று பால் விற்கும் மூதாட்டி - வாழ்வாதாரத்திற்காக சைக்கில் சென்று பால் விற்கும் மூதாட்டி

லக்னோ: தனது வாழ்வாதாரத்திற்காக 5 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து பால் விற்பனை செய்து வரும் மூதாட்டி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறார்.

woman peddles to sell milk
சைக்கிளில் சென்று பால் விற்கும் மூதாட்டி

By

Published : Jan 21, 2021, 7:46 PM IST

உழைத்து வாழ நினைப்பவர்களுக்கு வயது வெறும் எண்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிறார், உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஷீலா தேவி. இவர் தனது சைக்கிளில், கடந்த 22 ஆண்டுகளாக அருகாமையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பால் விற்பனை செய்து வருகிறார்.

பெண்கள் முன்னேற்றத்தின் முன்னுதாரணம் ஷீலா தேவி!

திருமணமான ஒரு ஆண்டிலேயே கணவனை இழந்தவர் ஷுலாதேவி. யார் கையையும் எதிர்பாராமல், சுயமரியாதையோடு தன் சொந்தக் காலில் நிற்க முடிவு செய்தார். கணவரின் மரணம் பாதித்தாலும், தனக்கானவற்றை செய்வதில் ஷீலாவின் கவனம் சிதறவில்லை.

தான் பிறந்த கிராமத்திற்கு வந்த ஷீலா, தனது தந்தை வைத்திருந்த நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அவருடைய வாழ்வில் இன்னும் சில துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதிலொன்று தான், அவர் தன் பெற்றோரை இழந்தது. அப்போதும் ஷீலா மனம் தளரவில்லை.

பால் விற்பனை

தனது தொழுவத்தில் வளர்க்க ஒரு சில எருமைகளை வாங்கினார். உள்ளூரில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்யத் தொடங்கினார். அவரது விடாமுயற்சி தான், இன்று அவரை கடைகளுக்கும் பால் விற்கும் அளவுக்கு மேம்படுத்தியுள்ளது.

தற்போது ஷீலா தேவிக்கு, 62 வயது. ஆனாலும் தன் இளமைக்காலத்தில் அவர் உழைத்தது போலவே இன்று ஓடோடி உழைக்கிறார். தனது கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்கிறார். ’உழைப்பு தான் கவுரவம்’ என்று அவர் பெருமிதம் கொள்கிறார். சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஷீலா எனர்ஜி டானிக்.

அரசு உதவிக்கரம் நீட்டுமா?

அரசு அவருக்கு ஏதேனும் உதவி செய்கிறதா என ஈடிவி பாரத் சார்பில் கேட்டோம். ‘இப்போது நான் எவ்வித ஓய்வூதியமும் பெறவில்லை. முன்னர் கிடைத்த பென்சனும் இப்போது கிடைக்கவில்லை. கிசான் சம்மன் நிதியின் கீழ் பதிவு செய்திருந்தபோதும், அதனுடைய பலன்கள் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. அரசிடமிருந்து எனக்கு கிடைத்தது கழிவறை வசதி மட்டும்தான்’ என்றார்.

இவர் மீது இருக்கும் அன்பின் நிமித்தம் 'ஷீலா புவா (aunty)' என்றுதான் மக்கள் இவரை அழைக்கிறார்கள். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோர் ஷீலா புவாவிற்கு உரிய உதவித்தொகை கிடைக்க உதவ வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:அதிமுக அரசு எல்லா இடத்திலும் ஊழல் செய்துவருகிறது - கனிமொழி குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details