உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஜாம் சம்வத் பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது நம்மிடம் பிரத்யேகமாக கரோனா சிறப்புச் சிகிச்சைக்கு தேவையான மருத்துவமனைகள் இல்லை. ஆனால் இன்று, நம்மிடம் ஆயிரம் கரோனா மருத்துவமனைகளும் 2 லட்சம் படுக்கைகளும் உள்ளன.
'ஜூன் மாத இறுதிக்குள் 60,000 வென்டிலேட்டர்கள் வாங்கப்படும்' - ஜே.பி. நட்டா - நரேந்திர மோடி
ஜூன் மாத இறுதிக்குள் 60 ஆயிரம் வென்டிலேட்டர்கள் பிரதமர் நிவாரண நிதி மூலம் வாங்கப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
60000-ventilators-will-be-available-through-pm-cares-fund-by-june-end-bjp-chief-nadda
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 21 ஆயிரம் வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பிரதமர் நிவாரண நிதி மூலம் ஜூன் மாத இறுதிக்குள் 60 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்கப்படும்.
அதேபோல் ஊரடங்கு அமல்படுத்தும்போது நாம் எந்த பிபிஇ உடைகளையும் தயாரிக்கவில்லை. அதன்பின் பிரதமர் மோடி, உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தியதன் விளைவாக, இப்போது நாம் தினமும் 4.5 லட்சம் பிபிஇ உடைகளை உற்பத்தி செய்கிறோம்” என்றார்.