சி.ஆர்.பி.எஃப். எனப்படும் மத்தியப் பாதுகாப்பு காவல் படை வீரர்கள், காவல் துறையினர் இணைந்து நக்சல்களின் நடமாட்டம் அதிகமுள்ள பிகார் மாநிலப் பகுதிகளில் கண்ணி வெடிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், அவுரங்காபாத் மாவட்டம் கனாடி கிராமப் பகுதியில், இரண்டரை கிலோகிராம் எடையுள்ள 60 கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டன.
நக்சல்கள் பதித்த கண்ணிவெடிகளைக் கைப்பற்றி பாதுகாப்பு படையினர் அதிரடி - கண்ணி வெடி தாக்குதல்
அவுரங்காபாத்: நக்சல்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் 60 கண்ணி வெடிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
கண்ணி வெடிகளை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர்
கிட்டத்தட்ட 400 மீட்டர் பரப்பளவில் தொடர்ச்சியாக இவ்வெடிகள் பதிக்கப்பட்டிருந்ததென மதன்பூர் பகுதியைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவோடு ஒப்பிட்டு வடகிழக்கு மக்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை - உள் துறை அமைச்சகம்