ஜம்மு காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து புதுச்சேரி வந்த 160க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆரோவில் பகுதியில் தொழில் புரிந்துவருகின்றனர். இந்நிலையில், மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவர்களின் தொழில் முடங்கியது. சுற்றுலா பயணிகளின் வருகையும் இல்லாததால் இவர்களின் வாழ்வாதரம் கேள்விக்குள்ளானது.
இதனால், தங்களை தங்கள் மாநிலத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவர்கள் மனு அளித்தனர். இருந்தபோதிலும், மாவட்ட ஆட்சியர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவை முன்பு திரண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தச்சூழ்நிலையில், ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்டஇடம்பெயர்ந்த தொழிலாளர்கள், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்திக்க இன்று சட்டப்பேரவை முன்பு கூடினர். ஆனால், முதல்வரைச் சந்திக்க காவலர்கள் அனுமதிக்காததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து சிலர் மட்டும் முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த நாராயணசாமி, ஜம்மு, காஷ்மீர் மாநில முதலமைச்சர்களுடன் பேசி நல்ல முடிவு அளிப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:புகைப்படக் கலைஞர்களுக்கு அரசு உதவ வேண்டும் - வைகோ வலியுறுத்தல்