பீகார் மாநிலத்திலிருந்து ஹைதராபாத்துக்குச் செல்லும் தானாப்பூர் விரைவு ரயிலில், கூலி வேலைக்காக ஏராளமான குழந்தை தொழிலளர்கள் கடத்தப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலறிந்து உஷாரான காவல்துறையினர், ஹைதராபாத் ரயில் நிலையத்துக்கு வந்த அந்த ரயிலை சோதனை செய்தனர். அப்போது கொத்தடிமைகளாக ரயிலில் 300 தொழிலாளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 60 பேர் குழந்தைத் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
ரயிலில் கடத்தல்: 60 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு - தானாப்பூர் எக்ஸ்பிரஸ்
பீகாரிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த குழந்தைகளை மீட்டு, ஆதார் மூலம் அவர்களின் விவரங்களை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மேல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைதராபாத் காவல்துறை உதவி ஆணையர் சீனிவாச ராவ் கூறினார். மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலையில் வேலைபார்க்க அழைத்து வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பீகார் அரசின் ஒப்புதலுடன் மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிறார் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.