உலக மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்துவருகின்றன.
கொரோனா வைரஸ் கோழியிலிருந்து பரவுவதாகச் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது. இதைப் பார்த்த பலரும் கோழி சாப்பிடுவதை நிறுத்தியதால், கோழி விற்பனையும், முட்டை விற்பனையும் திடீர் வீழ்ச்சியடைந்தது.
கர்நாடகாவில் உயிருடன் புதைக்கப்பட்ட 6 ஆயிரம் கோழிகள் இந்நிலையில், கர்நாடாக மாநிலம் பெல்கவியில் லோலுசுரா கிராமத்தைச் சேர்ந்த நஜீர் மக்கந்தர், கோழி பண்ணை நடத்திவருகிறார். இவர் கோழியிலிருந்து கொரோனா வைரஸ் பரவிவிடுமோ என்ற பயத்தில், பெரிய குழி தோண்டி பண்ணையிலிருந்த ஆறாயிரம் கோழிகளையும் வைத்து புதைத்துவிட்டார். இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கட்டுக்கடங்காத கொரோனா; 4,000 உயிர்கள் பலி