கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் வனப்பகுதியிலிருந்து நிறைய முதலைகள் நீரில் அடித்து வரப்பட்டுள்ளன. வெள்ளத்தின் போதே சில முதலைகள் வெளியில் திரிந்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
வெள்ளத்தில் தப்பி முதலைகளிடம் சிக்கிய கர்நாடகா! - Most of the floods in Karnataka have been flooded since the last one month
பெலகாவி: வெள்ளத்தில் இருந்து தப்பித்த கர்நாடக மக்களை, வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட முதலைகள் தற்போது அச்சுறுத்தி வருகின்றன.
farm-of-chikkodi
தற்போது வெள்ளத்திலிருந்து சீராகிவரும் நிலையில், சிக்கோடி பகுதியில் உள்ள ஓர் பண்ணை குளத்தில் ஆறு அடி நீளமுள்ள முதலை ஒன்று வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. மேலும் நிப்பானி என்ற பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் எட்டு அடி நீளமுள்ள முதலையையும் வனத்துறையினர் கைப்பற்றினர்.
இவ்வாறு குளம், கிணறு போன்ற நீர்த்தேக்க இடங்களில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.