இந்தோனேசியா வடக்கு மாலுகு மாகாணத்தில் இன்று (ஜூன் 4) 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி வர வாய்ப்பில்லை என அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மைய அலுவலர் வாக்யு குர்னியாவான், சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்தோனேசிய வானிலை ஆராய்ச்சி மைய அலுவலர் வாக்யு குர்னியாவான் கூறியதாவது; 'இந்த நிலநடுக்கம் முதலில் 7.2 ரிக்டரில் பதிவானதுபோல் காட்டி, பின்னர் 6.8 ரிக்டர் அளவாகப் பதிவானது.
அதேசமயம் புலாவ் மரோடாய் மாவட்டத்தின் வடமேற்கு தாருபா கிராமத்தில் 89 கி.மீ தூரத்தில், கடல் படுகையின் கீழ், 112 கி.மீ ஆழத்தின் மையப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்திற்கு நாங்கள் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கவில்லை' எனத் தெரிவித்தார்.
இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது. ஏனெனில், இது அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்துள்ளது. அதனால் இது "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படுகிறது.