கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்தவர் ஏ.கே. ஷிஹாபுதீனின். இவர் கோழி பண்ணை வைத்து வியாபாரம் நடத்திவருகிறார். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, இவரின் பண்ணையிலிருந்த கோழி ஒன்று, பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டையிட்டுள்ளது.
இதனால், ஆச்சரியமடைந்த ஷிஹாபுதீனின், அச்சம் காரணமாக பச்சை கரு கொண்ட முட்டையைச் சாப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, அந்த முட்டையின் மூலம் சில குஞ்சுகளைப் பொரித்து வளர்த்துவந்தார்.
இந்நிலையில், பச்சை முட்டைகள் மூலம் உருவாகிய ஆறு குஞ்சுகளும் நன்கு வளர்ந்து பச்சை நிறத்திலேயே முட்டையிட்டுள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பச்சை முட்டையின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து வைரலாகியுள்ளது. இதைப் பார்த்து வியப்படைந்த பலர் ஷிஹாபுதீனினைத் தொடர்புகொண்டு கோழி குறித்து விசாரித்துள்ளனர்.