வெளிநாடுகளைச் சேர்ந்த 57 தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சஹரன்பூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்தனர்.
கிர்கிஸ்தான், மேற்கு வங்கம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் சஹரன்பூர் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் சார்பாக வழக்காடிய வழக்கறிஞர், 'மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளிலிருந்து இவர்கள் ஏப்ரல் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரிமாண்ட் காலத்தை காணொலி கூட்டத்தின் மூலம் நீட்டித்தனர். அப்போதே, குற்றப்பத்திரிகையையும் காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அவர்களை இந்திய தண்டனைப் பிரிவு 188, தொற்று நோய்ச் சட்டப்பிரிவு 3இன் படி குற்றவாளிகளாக கண்டறிந்தது. தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு சுமார் ஒரு மாத காலம் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து நேற்று (ஜூன் 13) விடுவிக்கப்பட்டனர்' இவ்வாறு நமது ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.
அவர்கள் தற்போது தனியார் விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் நிஜாமுதீனில் சட்டத்தை மீறி, ஒரு சபையொன்றை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: '30 ஆண்டுகளில் மிக மோசமான இழப்பை டாடா நிறுவனம் இப்போது கண்டிருக்கிறது'