கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மத்திய அரசு முதலில் அவர்களை சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதி அளிக்க மறுத்தது.
பின்னர், அவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவருகின்றனர்.
இந்நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பிகாருக்கு திரும்பியவர்களில் 560 பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பிகார் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களின் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.