உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு அதிகரித்து தீவிரம் அடைந்துவருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
மக்கள் தொகை அதிகம்கொண்ட இந்தியா போன்ற நாட்டில், அசுர வேகத்தில் பரவும் கரோனா வைரஸ் போன்ற நோய்களை கட்டுக்குள் கொண்டுவருவது சவாலான காரியம் ஆகும்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகளவில் இதுவரை மருத்துகள் கண்டுக்கப்பிடிக்கப்படாத நிலையில், சமூக விலகலை கடைபிடித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதே இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் ஒரே வழியாகும். இந்தியாவில் இதுவரை கரோனாவால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், இதனால் 884 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மதர்சா மாணவர்கள் 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10-20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் பார்க்க: குரங்குகளுக்காக குரல் கொடுப்போம்...