தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

55ஆவது எல்லை பாதுகாப்பு தின அணிவகுப்பு; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: எல்லைப் பாதுகாப்பு படையின் 55ஆவது ஆண்டுதின சிறப்பு அணிவகுப்பை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியனந்த் ராய் பார்வையிட்டார்.

BSF
BSF

By

Published : Dec 1, 2019, 1:44 PM IST

நாட்டின் எல்லைப் பாதுகாப்பு படையின் 55ஆவது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இந்திய - வங்கதேசம், இந்திய - பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்க பிரத்தியேகமாக 1965ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி எல்லைப்பாதுகாப்பு படை தோற்றுவிக்கப்பட்டது.

எல்லைப் பாதுகாப்புப் படையின் 55ஆவது ஆண்டுவிழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பி.எஸ்.எஃப் வளாகத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பங்கேற்று தீர செயல்களை ஈடுபட்ட வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். மேலும், பாதுகாப்பு படை சார்பில் சிறப்பு அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது. வீரர்கள் மத்தியில் உரையாற்றிய நித்தியானந்த் ராய், பாதுகாப்பு பணியின் போது உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு டெல்லியில் குறைந்த விலை வீடுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

தீர செயல்கள் புரிந்த வீரர்களுக்கு விருது வழங்கிய நித்தியனந்த் ராய்

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details