தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் 9 மாத கைக்குழந்தை கரோனாவால் உயிரிழப்பு; எண்ணிக்கை 22ஆக உயர்வு!

புதுச்சேரி: கரோனா பாதித்த ஒன்பது மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

மோகன் குமார்
மோகன் குமார்

By

Published : Jul 16, 2020, 7:03 PM IST

Updated : Jul 16, 2020, 7:12 PM IST

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் வெளியிட்டுள்ள காணொலியில், “புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 79 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் 128 பேர், காரைக்காலில் 12 பேர், ஏனாமில் 7 பேர் என மொத்தம் 147 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 743ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 379 பேர், ஜிப்மரில் 177 பேர், கோவிட் கேர் சென்டர்களில் 117 பேர், காரைக்காலில் 57 பேர், ஏனாமில் 33 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 774 பேர் கரானா சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 947ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் பேசிய காணொலி
ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தை கரானா பாதிப்பால் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது” என்று பேசியுள்ளார்.
Last Updated : Jul 16, 2020, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details