தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகனும் அம்மாநில நகராட்சி நிர்வாக மற்றும் நகர மேம்பாடு அமைச்சர் கே.டி.ராமராவ் தலைமையில் நகரத்தில் உள்ள ஏழைகளுக்காக ஒரு லட்சம் வீடுகள் வழங்குவது குறித்த மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இப்பணிகள் குறித்து அவர் கூறுகையில், “மாநில அரசின் முதன்மை திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ள இத்திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 50,000 வீடுகள் ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இரட்டை படுக்கையறையுடன் ஒரு லட்சம் வீடுகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்ட பின்னரே இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
நகரப் பகுதியில் வாழும் ஏழைகளுக்கு முதல்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் வழங்கும் திட்டத்தின்பணி சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நிலையிலும் பணி தொடர்ந்து நடைபெற்றதாக அலுவலர்கள் என்னிடம் கூறினார்கள். தற்போது சிறப்பான முறையில் பணியாற்றி 80 சதவீத வேலைகளை முடித்துவிட்டனர்.