தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் தொடரும் கஞ்சா கடத்தல்! - பறிமுதல்

அமராவதி: விசாகப்பட்டினத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 500 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 11 பேரை கைது செய்துள்ளனர்.

cannabis

By

Published : Jul 24, 2019, 10:00 AM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் வந்த ஜீப்பை மறித்து ஆய்வு செய்தனர். அதில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 500 கிலோ கஞ்சா இருந்துள்ளது. பின்னர் ஜீப்பை பறிமுதல் செய்து, அதில் பயணித்த 11 பேரையும் காவல்துறை கைது செய்தது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனகம்பள்ளி ரேஞ்சில் கடந்த 10 நாட்களில் இதுவரை 12 வாகனங்கள் கஞ்சா கடத்தலால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி ரூ.25 லட்சம் மதிப்புள்ள 195 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகமாக ஆயிரத்து 400 கிலோ ஜூலை 12ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details