உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தின் கரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 831 பேராகவும், உயிரிழப்பு 43ஆகவும் இருக்கிறது. இந்நிலையில் மதுரா சிறைச்சாலையில் துணை சிறைத்துறை அலுவலர் உட்பட 24 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால், அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அந்த மாவட்ட சிறையில் 554 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 96 பெண்கள் உட்பட ஆயிரத்து 516 கைதிகள் இருக்கின்றனர். எண்ணிக்கை அதிகமானதால், கரோனா தொற்றுப் பரவல் அபாயம் அதிகம் எனக்கருதி, இந்த தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.