இது குறித்து மத்திய வனவிலங்குகள் காட்சி சாலையின் உயர் அலுவலர் ஒருவர் கூறும்போது, ’மத்திய வனவிலங்குகள் காட்சி நிர்வாகத்தினரின் அறிவுரைப்படி ரூ.500 கோடியில் வனவிலங்குகள் காட்சி சாலை அமைக்கப்படவுள்ளது. இதுவரைக் கண்டிராத வன விலங்குகள், இரவு நேர சவாரி, இயற்கை கல்வி மையம், பிரத்யேக முறையில் விலங்குகளுக்கான இனப்பெருக்க மையம் உள்ளிட்டவற்றைக் கொண்டு நவீன முறையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மும்பையில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் வனவிலங்குகள் காட்சி சாலை - ரூ 500 கோடி
மும்பை: உலகத் தரத்தில் ரூ.500 கோடி செலவில் வனவிலங்குகள் காட்சி சாலை அமைக்க கையெழுத்திடப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிருகக்காட்சி சாலை
நேற்று (புதன் கிழமை) பிர்கான் மும்பை மாநகராட்சி பிரமாண்டமாக வனவிலங்குகள் காட்சி சாலை அமைப்பதற்கு 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இதற்கான குறிப்பாணை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் முன்பு கையெழுத்தானது’ எனக் கூறினார்.