உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில், ஒருமுறை உபயோகிக்கப்படும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.
முன்னதாக மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் (Trivendra Singh Rawat), நெகிழி இல்லாத நகரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நெகிழி இல்லாத டேராடூன்: ஒன்று கூடிய ஒரு லட்சம் பேர்.! - நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
டேராடூன்: ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்பாடு இல்லாத நகரமாக டேராடூனை மாற்றுவோம் என்ற விழிப்புணா்வு பரப்புரையை முன்னெடுத்து நடந்த மனித சங்கிலி பேரணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு டேராடூனில், இந்த விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி நடந்தது. மியான்வாலா சாலையில் இருந்து ராஜ்பூர் சாலை, சக்ரதா சாலை, கடிகார கோபுரம், டெல்லி-சஹரன்பூர் சாலை, ஐ.எஸ்.பி.டி மற்றும் நகரின் பிற முக்கிய சாலைகள் வரை இந்த பேரணி நீண்டது.
இந்நிகழ்வில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சமூக குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நகரவாசிகள் மற்றும் காவலர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
50 கிலோ மீட்டர் வரை நீண்ட இந்த மனித சங்கிலியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஊசி, நெகிழிக் கழிவுகளைக் கொட்டிய லாரி பறிமுதல்!