நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தக் காத்திருப்பதால் கால தாமதம் உண்டாகிறது. அதைப் போக்க மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை ஃபாஸ்டாக் என்னும் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறையை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தவுள்ளது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடந்துவருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் பேசிய அவர், “தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 1.4 கிமீ தூரம் உள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் ஃபாஸ்டாக் அட்டை முறைக்கான தொழில்நுட்பம் 24 ஆயிரத்து 996 கிமீ தூரமுள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அது இந்தாண்டு இறுதிக்குள் 27 ஆயிரம் கிமீ தூரத்தை எட்டிவிடும். எனவே அதன் பிறகு அதாவது டிசம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிக் கட்டணம் ஃபாஸ்டாக் அட்டைகள் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.