கடந்த ஜூலை 14ஆம் தேதி 2015இல், உத்தரப் பிரதேசத்தில் சோம் சோனி (வயது 8) என்ற சிறுவன் காணாமல் போயுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தெலங்கானா காவல் துறையினர் புதிதாக உருவாக்கிய 'தர்பான்' என்ற ஃபேஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேர் மூலம் காணாமல் போன சிறுவனைக் கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி சோனியைக் கண்டுபிடித்த அசாம் காவல் துறையினர், குழந்தைகள் காப்பகத்தில் அவரை ஒப்படைத்துள்ளனர். தெலங்கானா காவல் துறையினர் காணாமல் போன அனைத்து சிறுவர்கள் குறித்த தகவல்களையும் செயலியில் பதிவேற்றம் செய்து ஸ்கேன் செய்து வரும் நிலையில், இச்சிறுவன் குறித்து கண்டிறிந்து, உத்தரப் பிரதேச காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
எட்டு வயதில் காணாமல் போன சோனு, தற்போது 13 வயதில் பெற்றோரிடம் காவல் துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.