தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 5 வயது சிறுவன்! - rescue operation for child

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஜாய்ன்ட்ரா என்னும் கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்த 5வயது சிறுவன்
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்த 5வயது சிறுவன்

By

Published : Apr 20, 2020, 3:42 PM IST

ராஜஸ்தான் பாவ்ரி தெஹ்லிஸ் அருகே உள்ள ஜாய்ன்ட்ரா கிராமத்தில் ரோஹித் என்ற சிறுவன் இன்று காலை 10 மணிக்கு தனது தாத்தாவின் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக 100 அடி ஆழமான ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் தவறிவிழுந்தான். பின்னர், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் இத்தகவல் கூறப்பட்டது.

இதையடுத்து மாநில பேரிடர் மீட்புக்குழு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்து அவசர ஊர்தி மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. தற்போது, ​​குழந்தையின் குரல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து கேட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: பொது நிகழ்வில் காங்கிரஸ் உறுப்பினர் கேட்ட கேள்வி - அதிர்ச்சியில் பெண்!

ABOUT THE AUTHOR

...view details