நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 ஆயிரத்து 71 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 136 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது.
நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக தொற்று பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, 53 விழுக்காடு கரோனா உயிரிழப்புகள் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் பதிவாகியுள்ளன.