இதுகுறித்து ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்றார்.
மேலும், “பயங்கரவாதிகள் சம்ஷாபாரி மலைத்தொடர் வழியாக இந்தியாவிக்குள் ஊடுருவி, குஜ்ஜர் தோக் பகுதியில் ஆடு மேய்ப்பவர்களாக தங்கியிருந்திருக்கலாம்.
இதே பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது நடைபெற்ற பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் காலநிலை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது“ எனத் தெரிவித்தார்.