ஜார்கண்ட் மாநிலம், ரஞ்சியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் ரஞ்சி நகர்ப் பகுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் ஐந்து நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள், அரை டஜன் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அவர்கள் பிஎல்எஃப்ஐ எனும் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் விஜய் முண்டா, விஷால் சர்மா, விஷால் குமார் ஸ்வான்சி, ஆகாஷ் சிங் மற்றும் சுஷில் வர்மா என்பதும் தெரிய வந்தது.