கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் இந்த ஊரடங்கை மீறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்தந்த பகுதிகளில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக அமைச்சரவைக்கு இடையேயான மத்தியக் குழு பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டது.
அந்தவகையில், கொல்கத்தாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த ஓட்டுநர்கள், வீரர்கள் உள்ளிட்ட 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 25க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.