தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாயமான விமானம்! தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு - Missing Flight

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன்-32 ரக விமானம் மாயமானதைத் தொடர்ந்து, அந்த விமானம் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

AN-32 missing flight

By

Published : Jun 9, 2019, 12:12 PM IST

ஏஎன்-32 ரக விமானம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ஜூன் 3ஆம் தேதி 12.27 மணிக்கு புறப்பட்டு அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் மெச்சுக்கா வனப்பகுதியில் தரையிறங்க புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 35 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பிலிருந்து விமானம் விலகியது.

விமானம் மாயமான பகுதி மெச்சுக்கா அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், காலநிலை மோசமாக இருந்ததாலும், இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. ஏஎன்-32 ரக விமானம் மாயமாகி இன்றுடன் ஆறு நாட்கள் ஆன நிலையில், தொடர்ந்து விமானத்தை தேடும் பணி நடைபெற்றுவருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்திய விமானப்படை நேற்று (ஜூன் 8) தொலைந்துபோன ஏஎன்-32 ரக விமானத்தைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மாயமான விமானத்தில் எட்டு விமானப்படை வீரர்கள், ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது. விமானம் மாயமாகி ஆறு நாட்கள் ஆன நிலையில், இவர்களின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தகவல் எதுவும் தெரியவில்லை.

ABOUT THE AUTHOR

...view details