மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள்வேலைக்காககாஷ்மீருக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் மேற்குவங்க தொழிலாளர்கள் 5 பேர் சுட்டுக்கொலை! - மம்தா பானர்ஜி ட்விட்
காஷ்மீர்: மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 labours killed in west bengal, காஷ்மீரில் மேற்குவங்கத் தொழிலாளர்கள் 5 பேர் சுட்டுக்கொலை
இச்சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘காஷ்மீரில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதைக் கேட்டு அதிர்ச்சி மற்றும் கவலையடைந்தேன். அவர்களது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேநீர் தயாரித்த மம்தா!