மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்திலுள்ள பெல்லா கிராமத்தில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் கொதிகலன் ஒன்று வெடித்தது. இந்த விபத்தில் ஐந்து பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் வாட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். இதில் ஒருவர் வெல்டராக பணியாற்றியவர் என்றும், மற்ற நால்வரும் உதவியாளர்கள் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.