நைஜீரியாவில் இந்திய கடற்படை வீரர்கள் ஐந்து பேரை பயங்கரவாதிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட இந்திய கடற்படை வீரர்களை மீட்க நடவடிக்கை - சுஷ்மா ஸ்வராஜ்! - nigeria
டெல்லி: நைஜீரியாவில் ஐந்து இந்திய கடற்படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபடுத்தியுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜ்
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய கடற்படை வீரர்கள் கடத்தப்பட்ட செய்தியை அறிந்தேன். அங்குள்ள இந்திய வெளியுறவு தூதரிடம் அவரை மீட்பதற்கு அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஊடகங்கள் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.