தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறார் ஆபாச படங்களை பதிவேற்றிய 5 பேர் கைது - டெல்லி சைபர் கிரைம் காவல்துறையினர்

டெல்லியில் சமூக வலைதளங்களில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றிய ஐந்து பேரை டெல்லி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

5 held by Delhi Police for circulating child porn on social media platforms
5 held by Delhi Police for circulating child porn on social media platforms

By

Published : Jan 5, 2021, 1:02 PM IST

டெல்லி:சிறார் ஆபாச படங்களை இணையதளங்களிலோ, சமூக வலைதளங்களிலோ பதிவேற்றும் நபர்களை கண்டறிய டெல்லி காவல் துறையின் சைபர் கிரைம் அமைப்பு 'மசூம்' என்ற ஆப்பரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆப்பரேஷன் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் சிறுவர் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 26 சமூக வலைதள பயன்பாட்டாளர்களை கைது செய்தனர்.

தற்போது, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய ஐந்து நாள்களில் டெல்லியில் சமூக வலைதள ஊடகங்களில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றியதாக ஐந்து பேரை கைது செய்துள்ளதாக சைபர் கிரைம் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய டெல்லி சைபர் கிரைம் குழுவினர், "செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி இதுபோன்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மசூம் ஆபரேஷன் மூலம் கைது செய்யட்ட இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details