தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஐந்து இளைஞர்கள் பலி! - நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள், செல்பி எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி விழந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

5 boys died due to drowning in waterfall while taking selfie in palghar
5 boys died due to drowning in waterfall while taking selfie in palghar

By

Published : Jul 4, 2020, 9:10 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கல் மாண்ட்வி நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு ஜவஹர் நகரை சேர்ந்த சுமார் 15 இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நீர்வீழ்ச்சியின் முனையில் நின்றுக்கொண்டு செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேர் நிலைதடுமாறி கீழே விழந்து தத்தளித்தனர்.

இதனையடுத்து, கீழே விழுந்த தங்களது நண்பர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மற்ற சிலரும் நீரில் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

இதில், செல்பி எடுக்க முயன்று கீழே விழுந்த இருவர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவம் இடம் விரைந்த காவல் துறையினர், தீணையப்பு துறை வீரர்களின் உதவியுடன், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களுடன் குளிக்கச்சென்ற மற்ற இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details