தெலங்கானா மாநிலம் மேடாக் மாவட்டத்திலுள்ள முஸ்லாபூர் கிராமத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் இருவர், மக்களிடம் மின் கட்டணம் வசூலிக்கச் சென்றுள்ளனர். அப்போது, மின்சாரப் பிரச்னை தொடர்பாகத் தாங்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தும், மின் வாரியம் இதுவரை எவ்வித தீர்வும் எடுக்கவில்லை என்று கூறி, ஊழியர்கள் இருவரையும், கிராமத்தினர் ஒரு தூணில் கட்டி வைத்துள்ளனர்.
மின் கட்டணம் வசூலிக்கச் சென்ற ஊழியர்களைக் கட்டிவைத்த கிராம மக்கள்! - தெலங்கானா
ஹைதராபாத்: மின் கட்டணம் வசூலிக்கச் சென்ற மின்வாரிய ஊழியர்கள் இருவரைக் கிராம மக்கள் தூணில் கட்டிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![மின் கட்டணம் வசூலிக்கச் சென்ற ஊழியர்களைக் கட்டிவைத்த கிராம மக்கள்! electricity department officials villagers tied electricity department officials Telangana Muslapur village electricity dept officials held hostage மின்வாரிய ஊழியர்களைக் கட்டிவைத்த மக்கள் தெலங்கானா மேடாக் மாவட்டம் மின்வாரிய ஊழியர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8082677-47-8082677-1595124434416.jpg)
மின்சரக் கட்டணம் வசூலிக்கச் சென்ற ஊழியர்களைக் கட்டிவைத்த மக்கள்
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள், ஊழியர்கள் இருவரையும் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து, ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவால் கைவிட்ட உறவினர்கள்; உடலை தள்ளுவண்டியில் கொண்டுசென்ற அவலம்!