கரோனா வைரஸ் தொற்றால், இதுவரை நாடு முழுவதும் 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் நிலை பணியாளர்கள் சார்ந்த அனைத்து துறைகளும் கரோனா வைரஸ் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து விமானிகளுக்கு, கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் தேதி, சீனாவிலிருந்து மருந்து பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா கார்கோ விமானங்களை இயக்கியுள்ளனர். தொடர்ந்து இது போன்று சீனாவிற்குச் சென்று வந்த விமானங்களை இயக்கிய விமானிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.