ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்ட நாளிலிருந்து அங்கு இணைய சேவை முடங்கியிருந்தது. அதன்பிறகு குறைவான இணைய சேவை மட்டும் இயக்கத்தில் இருந்தது. தற்போது கோவிட்-19 தொற்றால் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் வேளையில், இன்றிரவு முதல் அங்கு அதிவேக 4G இணைய சேவை பழையபடி இயக்கத்துக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரேடியோ காஷ்மீரிடம் பேசிய அரசு செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சல், இந்த முடிவு வியாழன் அன்று துணைநிலை ஆளுநர் ஜி.எம். முர்மு தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதிவேக இணைய சேவையை வழங்குவதன் மூலம் காஷ்மீர் மக்களை வீட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற ஒருமித்த கருத்தால் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது என்றார்.