நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று(செப்.14) தொடங்கி, அக். ஒன்றாம் தேதி வரை நடக்கவுள்ளது. 18 நாள்கள் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் 47 பொருள்களில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 நாள்களில் 18 அமர்வுகள் நடக்கவுள்ளன. அதில் 45 மசோதாக்கள், நிதி தொடர்பான 2 விஷயங்கள் உள்பட 47 பொருள்கள் பற்றி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சட்டத்திற்கு மாற்றாக 11 மசோதாக்கள்:
ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா 2020, திவால்நிலை (இரண்டாவது) திருத்த மசோதா 2020, வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த மசோதா 2020, வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில ஏற்பாடுகளை தளர்த்துவது) மசோதா 2020, தொற்றுநோய்கள் திருத்த மசோதா 2020, அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் திருத்த மசோதா 2020, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் திருத்த மசோதா 2020, உழவர் உற்பத்தி மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விலைகள் உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய 11 மசோதாக்கள் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட உள்ளன.
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய சட்டங்கள்:
இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் என பூச்சிக்கொலை மேலாண்மை மசோதா 2020, இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணைய மசோதா 2020, 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஹோமியோபதி தேசிய ஆணைய மசோதா 2020, 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆயுர்வேதவின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மசோதா 2020, இந்த ஆண்டு (2020) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, விமான திருத்த மசோதா, 2020இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, நிறுவனங்கள் திருத்த மசோதா ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மசோதாக்கள்:
ஒழுங்குமுறை மசோதா, 2020இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா 2020, இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கான திருத்த மசோதா, 2020இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.